Saturday, January 9, 2010

நக்கீரனே இது நியாயமா?

எஸ்.ஐ.வெற்றிவேல் நடு ரோட்டில் கொல்லப்பட்ட விடியோ பார்த்து கண் கலங்கி கோப படாமல் இருக்க முடியாது. அந்த அமைச்சர்கள், மற்ற அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எல்லோரும் குற்றவாளிகளே.

NDTV விடியோவை பாருங்கள். உங்களுக்கு எனக்கு வந்தது போல் கோபம்,ஆத்திரம்,ஒன்றும் செய்ய முடியாத இயலாமை எல்லாம் வரலாம். ஆனால் அதில் ஒரு அரசு அதிகாரி வெற்றிவேலை, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அவரை பாடின்னு சொல்றாரு. எப்படி உயிரோடு இருப்பவரை பாடின்னு சொல்லலாம். அட உன்னால உதவி தான் செய்ய முடியல..மரியாதயா பேச முடியாதா? எனக்கு வர்ற கோவத்துக்கு...

சரி நக்கீரன் விஷயத்துக்கு வருவோம். இவங்க உண்மையதான் ஒழுங்கா எழுத முடியாது..பொய்ய உண்மையாட்டம் என் எழுதனும்?. இது தான் நக்கீரன் எழுதி இருப்பது...


அம்பாசமுத்திரம் பக்கத்தில் இருக்கும் கிராமப்பகுதிகளில் அரசின் இலவச வேட்டி -சேலைகள் சரியாக விநியோகிக்கப்பட வில்லை என.. பொது மக்கள் போராட்டங் களில் இறங்க... இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தில் 7-ந் தேதி காலை சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டம் மதியம்வரை நீடிக்க... அது முடிந்ததும் தான் பணியாற்றும் ஆழ்வார்க் குறிச்சிக்கு டூ வீலரில் கிளம்பிய எஸ்.ஐ. வெற்றி வேல், மறக்காமல் ஹெல்மெட்டை அணிந்து கொண்டார். அது ஏற்படுத்தப்போகும் விபரீதம் அறியாமல்.

மதியம் 3.30 மணியளவில் ஆம்பூருக்கும் ஆழ்வார்க்குறிச்சிக்கும் இடையில் இருக்கும் ஆற்றுப் பாலத்தை அவர் கடந்தபோது... செடிப் புதர்களில் இருந்து குபீரென 5 பேர் எழுந்தனர். ’"அவனேதான்... விடாதீங்க... போட்டுத்தள்ளுங்க' என அவர்களில் ஒருவன் ஆவேசமாகக் குரல் கொடுக்க... ஒருவன் பைப் வெடிகுண்டை எடுத்து வீசினான். ஏதோ சிந்தனையில் வந்துகொண்டிருந்த எஸ்.ஐ. வெற்றிவேல்... திடீரென தன்னருகே விழுந்து வெடித்த குண் டால் அதிர்ந்துபோய் நிலைகுலைந்து விழுந் தார். அதற்குள் அவ ரை சுற்றிவளைத் துக்கொண்ட அந்தக் கொடூரர்கள்.. வீச் சரிவாள்களால் அவரது கை, கால், கழுத்து என உடம்பெங்கும் வெட்டிப்பிளக்க... பீறிட்ட ரத்தத்தோடு... "ஐயோ' என மரண ஓலம் எழுப்பினார் எஸ்.ஐ.

அப்போது "சர் சர்'ரெனெ அணிவகுத்துவந்த கார் வரிசையைக் கண்ட அந்தக் கொடூரர்கள்... சட்டென தப்பி ஓட ஆரம்பித்தனர். அது அமைச்சர்கள் எம்.ஆர்.கே, மைதீன்கான் ஆகியோர் வந்த கான்வாய். முன்னால் சீறிவந்த பாதுகாப்புப் படையினரின் கார்... சாலையில் வெட்டுண்டு துடித்துக்கொண்டிருந்த எஸ்.ஐ.யைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றது. சரசரவென காரில் இருந்து இறங்கிய வீரர்கள்... தங்கள் துப்பாக்கிகளால் ஓடிக்கொண்டிருந்தவர்களை சுட்டனர். எனினும்.. வீரர்களை நோக்கி ஒரு குண்டை வீசிவிட்டு... வழிமறித்த ஆற்றில் இறங்கி... செடிகொடிப் புதர்களின் ஊடே ஓடிமறைந்தது அந்தக் கும்பல்.

துடித்துக்கொண்டிருந்த எஸ்.ஐ.யை நெருங்கி "பயப்படாதீங்க' என ஆறுதல் சொன்ன சுகாதார அமைச்சரான எம்.ஆர்.கே... காரில் இருந்து தனக்கு போடப்பட்ட சால்வைகளை கொண்டுவரச்செய்து... ரத்தம் கொப்பளித்த இடங்களில் கட்டு போடச் சொன்னார். பின்னர் எஸ்.ஐ.யை மருத்துவமனைக்கு அனுப்பும் ஏற்பாடு நடந்தது.
ஸ்பாட்டில் இருந்த கலெக்டர் ஜெயராமன் ""மர்மக் காய்ச்சல் தொடர்பா அம்பை மருத்துவமனையில் அமைச்சர் எம்.ஆர்.கே. ஆய்வு நடத்தினார். அதை முடிச்சிக்கிட்டு நாங்க திரும்பிவந்தப்பதான் இந்த கொடூரத்தைப் பார்த்து எஸ்.ஐ.யை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவச்சோம்'' என்றார் நம்மிடம். எனினும் எஸ்.ஐ.யின் உயிர் பிரிந்துவிட்டது.

கொல்லப்பட்ட எஸ்.ஐ. வெற்றி வேல் மணல் கடத் தலைத் தடுப்பதில் தீவிரம் காட்டிவந்த தால்... கடத்தல் புள்ளிகள் இப்படி செய்திருக்கலாமோ என காக்கிகள் முதலில் சந்தேகப்பட்டனர். கடைசியில் விசாரனையைத் தீவிரப்படுத்தியபோதுதான்... உண்மைக் குற்றவாளிகளை நெருங்கினார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் ""கடயம் எஸ்.ஐ.யைக் குறிவைத்திருந்த ஒரு கும்பல்... தவறுதலாக அவர் என்று நினைத்து இவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது'' என்றார் வருத்தம் இழையோட.

விசாரணை டீமில் இருக்கும் அந்த அதிகாரி நம்மிடம் ""கொலை நடந்த ஸ்பாட்டில் கொலையாளிகள் ஒரு பைக்கையும் அரிவாளையும் வெடிக்காத வெடிகுண்டுகளையும் விட்டுவிட்டுப் போயிருந்தனர். பைக்கின் நம்பர் பிளேட்டில் இரட்டை இலை சின்னமும் ஜெ. படமும் பொறிக்கப்பட்டிருந்தது. வண்டியின் நம்பரை டிரேஸ் செய்தபோது அது வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. வெள்ளூர் குறித்து விசாரித்தபோது கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன் பெண் எடுத்துப் பிரச்சினையான ஊர் என்கிற விபரமும் கிடைத்தது. கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிர மணியனுக்குக் குறிவைத்த அவர் மனைவி தரப்பு.... அவரைப் போலவே உடல்வாகு கொண்ட வெற்றிவேலை வெட்டித் தள்ளிவிட்டது. வெற்றிவேல் ஹெல்மெட் போட்டிருந்ததால் கொலையாளிகள் அவர் முகத்தை சரியாகக் கவனிக்காமல் இந்தப் படுபாதகத்தை அரங்கேற்றிவிட்டார்கள்''’என்றார் துயரக்குரலில்.

ஆள் மாறாட்டத்தால் உயிர் தப்பிய கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியை தொடர்புகொண்டு இந்தப் படுகொலை குறித்துக் கேட்டபோது... ’""வெள்ளூரைச் சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை... பட்டதாரி என்று எனக்குக் கட்டிவைத்தனர். ஆனால் அவர் 8-ஆம் வகுப்பையே தாண்டாதவர். மேலும் அவரின் போக்கு ஒத்துப் போக வில்லை. எனவே டைவர்ஸ் கேட்டேன். உடனே என் மீது அவர் குடும்பம் வரதட்சணை கொடுமை என புகார் கொடுத்தது.

சிவகாமியோடு வாழாவிட்டால் தீர்த்துக்கட்டிவிடுவோம் என எச்சரித்தனர். அவளுடன் வாழ்வதைவிட சாவது மேல் என்று சொல்லி விட் டேன். இந்தக் கோபத்தில் சிவகாமி யின் தம்பி முருகன் ரெண்டுமூன்று நாளாய் என்னை வேவு பார்த்தான். நான் கவலைப்படவில்லை. இருமுடி கட்டியிருந்த நான்... 7-ந் தேதி அதிகாலைதான் சபரிமலைக்குப் பயணமானேன். இது தெரியாத அந்தக் கும்பல்... நான் என நினைத்து பாவம் அவரை...''’என்றவர் பேச முடியாமல் கமறினார்.

கூண்டோடு தலைமறைவாகி விட்ட வெள்ளூர் சிவகாமி குடும்பத் தைத் தேடி... ஏரியாவையே சல் லடையாக சலித்துக்கொண்டிருக் கிறார்கள் காக்கிகள்.

நெல்லை சரகத்தில் உள்ள காவலர்துறையில் அனைத்து பிரிவின ரும் தங்கள் ஒருநாள் சம்பளத்தை கொல்லப் பட்ட சப்-இன்ஸ் பெக்டர் வெற்றிவேல் குடும்பத்திற்கு வழங்குகின்றனர்.

-பரமசிவன்
படங்கள் : ராம்குமார்



அமைச்சர்கள் மேல் உள்ள குற்ற்ச்சாட்டே வெற்றிவேலை கொண்டு செல்லும் வரை காரை விட்டு இறங்காதது தான். ஆனால் நக்கீரன் என்ன சொல்கிறது? அமைச்சர் காரில் இருந்து இறங்கி ஆறுதல் சொன்னாராம்..சால்வை வைத்து கட்டு போட சொன்னாராம்..நடக்காத ஒன்றை திரித்து எழுத வேண்டிய அவசியம் என்ன? திமுகவுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது தான்..ஆனா இப்படியா..என்ககு வர்ற கோவத்துக்கு...


Tamilish

3 comments:

  1. இதுக்குத்தான் நக்கீர கோவாலுக்கு அவார்டு கொடுக்கப்பட்டது.....

    ReplyDelete
  2. நக்கீரன் விலை போய் ரொம்ப நாளாயிற்று. அதனால்தான் பத்திரிகை விலை போக மாட்டேன்கிறது.

    ReplyDelete
  3. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

    தொடர்ந்துஎழுதுங்கள் வாழ்துக்கள்

    ReplyDelete